#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதுரையை தூக்கி சாப்பிட்ட திருநெல்வேலி..! வேற லெவல் ஆட்டம்.!
6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று திருநெல்வேலியில் நடந்தது. நேற்றைய தினம் 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருநெல்வேலி ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருநெல்வேலி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே திருநெல்வேலி அணி அதிரடியாக விளையாடியது. திருநெல்வேலி அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் திருநெல்வேலி அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.