மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதிப்போட்டி பரிதாபம்: ஒரு அடி கேப்பில் கோப்பையை கோட்டை விட்ட நியூசிலாந்து அணி! சோகத்தில் ரசிகர்கள்
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி மயிரிழையில் உலக கோப்பையை தவற விட்டது.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.
பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போல்ட் வீசிய 6 பந்துகளில் 15 ரன்களை அடித்தனர். அதன்பின்னர் மார்ட்டின் கப்டில் உடன் களமிறங்கிய ஜிம்மி நீசம், ஆர்ச்சர் வீசிய முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் பெற்றுத்தந்தார். கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் பெற்றால் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் நிலை உருவானது.
ஆனால் அந்த கடைசி பந்தை லெக் சைடில் தட்டி விட்டு ஓடிய மார்டின் கப்டில் இரண்டாவது ரன் எடுக்கும் முயற்சியில் ஒரு அடி தூரத்தில் ரன் அவுட் ஆனார். இதனால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. பின்னர் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு அடி கேப்பில் கோப்பையை கோட்டை விட்ட நியூசிலாந்து அணி.