மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3 வது ஒருநாள் போட்டி!!.. டிக்கெட் வாங்க ரசிகர்கள் போட்டா போட்டி..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. 4 வது போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிவடைந்தது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் 3 வது ஒருநாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. இதில் ரூ.1,500, ரூ.3,000 ஆகிய குறைந்த விலை டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இதன் பின்னர் ரூ.5,000, ரூ.6,000, ரூ.8,000, ரூ.10,000 விலைகளில் ஆன டிக்கெட்களுக்கு கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் நேரடி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. கவுண்ட்டரில் ரூ.1,200 விலைக்கான டிக்கெட் மட்டும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.