இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடுவதற்கு தயாரான பாகிஸ்தான் அணி! ஒரே நாளில் 7 வீரர்களுக்கு கொரோனா!



pakistan cricket players affected by corona

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.  வீரர்கள் புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் ஆகிய மூன்று  வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது. அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், பரிசோதனையின் முடிவிலேயே நோய் இருப்பது தெரியவந்துள்ளது, இதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Pakistan

இந்நிலையில், மீதமுள்ள வீரர்களுக்கு  நடந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின.  இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியில், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.  

இந்தநிலையில் பாகிஸ்தான் அணியில் மொத்தம் 10 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து, அவர்கள் அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.