மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியா வெல்ல வேண்டுமென பிரார்த்தனை செய்யும் பாகிஸ்தான்! என்ன காரணம் தெரியுமா?
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
இதுவரை 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் 11 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் தகுதி பெற்றுவிடும்.
தற்பொழுது அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணிக்கான போராட்டம் தான் உலகக் கோப்பை தொடரில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்திற்காக இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மிகப்பெரிய பல பரிட்சையை நடத்துகின்றன.
இந்த மூன்று அணிகளுக்கும் இன்னும் தலா இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்குள் முன்னேறிவிடும். அதே சமயம் ஒரு போட்டியில் தோல்வியடைந்து பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அணிகள் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அவர்களில் ஒரு அணி அரை இறுதிக்குள் நுழைந்துவிடும்.
எனவே நாளை இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவ்வாறு இந்தியா இங்கிலாந்தை வெல்லும் பட்சத்தில் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அதிகம் உள்ளது.
காரணம் பங்களாதேஷ் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை இன்று ஆப்கானிஸ்தானை வென்று விட்டால் அடுத்து பங்களாதேஷ் உடன் தான் மோத வேண்டும். இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற அதிகம் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் அரையிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.