#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடித்து நொருக்கிய பாக்கிஸ்தான்.. இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஃபக்கர் ஷமான் சிறப்பான துவக்கத்தினை ஏற்படுத்தினர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 72 ரன்கள் எடுத்தனர். ஃபக்கர் ஷமான் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் ஹபீஸ் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரும் அரைசதம் அடித்தனர். பாபர் அசாம் 56, ஹபீஸ் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாக்கிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கியுள்ள இங்கிலாந்து அணியின் பெயர்ஸ்டோவ் மற்றும் டாம் பான்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.