நான் ஊக்கமருந்து சாப்பிடவே இல்லை; எல்லாம் விதி - ப்ரித்திவ் ஷா வருத்தத்துடன் விளக்கம்



Pritiv Shaw explained about dope usage

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ப்ரித்திவ் ஷாவை பிசிசிஐ 8 மாதம் தடைவிதித்துள்ளது. ஆனால் தான் ஊக்கமருந்து சாப்பிடவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சயத் முஸ்தாக் அலி தொடரின் போது ப்ரித்திவ் ஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சிறுநீர் சோதனை தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் அவரது சிறுநீரில் டெர்புட்டலைன் என்ற தடைசெய்யப்பட்ட வேதிப்பொருள் அதிகமாக இருந்தது தான். 

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ப்ரித்திவ் ஷா, "அடுத்த நவம்பர் 15 ஆம் தேதி வரை நான் எந்த கிரிக்கெட் தொடரிலும் கலந்துகொள்ள முடியாது என்ற பிசிசிஜயின் அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியாய் உள்ளது. உண்மையில் நான் எந்த ஊக்கமருந்தும் சாப்பிடவில்லை. 

Pritiv Shaw

பிப்பரவரி மாதத்தில் நடைபெற்ற தொடரின் போது நான் மிகுந்த சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டேன். இதனால் இருமலுக்கான காஃப் சிரப் அதிகமாக சாப்பிட்டேன். அதில் இருக்கும் அந்த வேதிப்பொருள் தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.

ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில் நான் இதைப்போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். இது என்னுடைய தவறுதான். பிசிசிஐயின் நடவடிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சம்பவம் நிச்சயம் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்" என கூறியுள்ளார்.