மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டை: பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் டோக்கன் அடிப்படையில் மட்டுமே காளைகள் அவிழ்ப்பு.! ஆவலுடன் காத்திருக்கும் காளை உரிமையாளர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டம் வாரைவளர் வாராப்பூர் நாட்டை சேர்ந்த பாப்பான்விடுதி கிராமத்தில் ஸ்ரீமுத்துமுனீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாப்பான்விடுதி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா அதிவிமர்சியாக நடைபெறவுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல்,தேனி சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்துகொள்ள உள்ளன.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்களுக்குமான டோக்கன்களும், காளைகளுக்குமான டோக்கன்களும் சமீபத்தில் வழங்கப்பட்டது. பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் இந்தவருடம் காளையின் உரிமையாளர்கள் சிரமப்படாத வகையில் அட்டியை(தள்ளுவாடி) தவிர்த்து டோக்கன் முறைப்படி மட்டுமே காளைகள் அவிழ்க்கப்படும் என விழா கமிட்டியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் ஆவலுடன் பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டு விழாவிற்காக காத்திருக்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், மின்விசிறி எவர் சில்வர் கட்டில், பேன்,பிரிட்ஜ்,பாத்திரங்கள்,உட்பட பல்வேறு பரிசு பொரு ட்கள் வழங்க காத்திருக்கின்றனர்.