#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலி உள்ளே வந்தவுடன் கேட்கும் முக்கியமான கேள்விகள்.. மனம் திறக்கும் புஜாரா!
இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த இணைகளாக இருந்தவர்கள் சச்சின் மற்றும் டிராவிட். இவர்களின் ஓய்விற்கு பிறகு இந்திய அணிக்கு அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜோடி கோலி மற்றும் புஜாரா.
இவர்கள் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்துள்ள 62 இன்னிங்ஸ்களில் 7 முறை 100, 14 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். இவர்களின் சராசரி 47.44.
கோலியுடன் களத்தில் இருக்கும் அனுபவத்தை புஜாரா தற்போது பகிர்ந்துள்ளார். அதில் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கியதும் எதிரணியினர் என்ன செய்ய முயல்கிறார்கள், பந்து எந்த திசையை நோக்கி சுழல்கிறது, இடதுகை பந்துவீச்சாளர்கள் எந்தவிதமான சுழலை பயன்படுத்துகிறார்கள் போன்ற கேள்விகளை முதலில் கேட்டுக்கொள்வார்.
கொலி எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் விளையாடுவதால் அவரை அவுட்டாக்குவதிலேயே எதிரணியினரின் கவனம் இருக்கும். அதனால் என்னால் மிகவும் சுலபமாக விளையாட முடியும் எனவும் புஜாரா கூறியுள்ளார்.