மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பான கட்டத்தில் மோதும் பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள்..!! அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு..?!!
தர்மசாலாவில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 65 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தர்மசாலாவில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மொத்தம் உள்ள 70 லீக் போட்டிகளில் இன்னும் 5 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களுக்கான போட்டியில், முறையே சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் 1 லீக் போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தலா 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முறையே ராஜஸ்தான் அணி 6 இடத்திலும் பஞ்சாப் 8 வது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளில் ஏதாவது ஒரு அணி இந்த போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கலாம். அதற்கு வெற்றி பெறும் அணியின் நிகர ரன் ரேட் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் 14 புள்ளிகளுடன் 4 வது மற்றும் 5 வது இடத்தில் இருக்கும் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தங்களது அடுத்த போட்டியில் தோல்வியடைந்தால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற 50 சதவீதம் வாய்ப்புள்ளது. 2 மற்றும் 3 ஆம் இடம் வகிக்கும் சென்னை, லக்னோ அணிகள் ஏற்கனவே 15 புள்ளிகளுடன் இருப்பதால் 4 ஆம் இடத்திற்கான போட்டியில் இவ்விரு அணிகளும் உள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியதில் ராஜஸ்தான் 14, பஞ்சாப் 11 வெற்றிகளை பெற்றுள்ளன. ப்ளே-ஆப் சுற்றில் எஞ்சியுள்ள 1 இடத்தை பிடிக்க இரு அணிகளுமே மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.