மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டம் காணும் மும்பை அணியின் இரும்பு தூண்.. எப்படி சமாளிக்கப் போகிறார் ரோகித்!
இந்திய கிரிக்கெட் அணியின் வளரும் ஆல்ரவுண்டராகவும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இரும்பு தூணாகவும் சில ஆண்டுகளாக இருப்பவர் ஹார்டிக் பாண்டியா. மிடில் ஆர்டரில் களமிறங்கும் இவர் பல ஆட்டங்களை தலைகீழாக மாற்றியுள்ளார்.
பந்துவீச்சிலும் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர் ஹார்டிக் பாண்டியா. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இவர் கருதப்பட்டார்.
ஆனால் 2019 உலகக்கோப்பைக்கு பிறகு இவர் அதிகமாக விளையாடவே இல்லை. முதுகில் ஏற்பட்ட சதை காயம் காரணமாக இவருக்கு லண்டனில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரால் சரியாக உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.
மேலும் மனைவி கர்ப்பம், திருமணம் என பிஸியாகவே இருந்த இவரால் கிரிக்கெட் பயிற்சியில் ஆர்வம் காட்ட முடியவில்லை. இதனால் இவர் எந்த பார்மில் இருக்கிறார் என்று முதல் போட்டியில் பார்த்த பிறகே தெரியும். இந்த தொடர் முழுவதிலும் ஆடும் லெவனில் ஹார்டிக் பாண்டியா இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.