இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா.. ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல்.! மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.!



Racist attack on Indian fans during England Test match

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் குவித்துள்ளது.

கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய டெஸ்ட் போட்டியில் இனவெறி துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகளை கேட்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். எட்ஜ்பாஸ்டனில் உள்ள சக ஊழியர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் விசாரணை செய்வார்கள். கிரிக்கெட்டில் இனவெறிக்கு இடமில்லை. இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.