மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி.! அதற்குள் ராகுல் டிராவிடுக்கு வந்த சோதனை.!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.