மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முக்கியமான நேரத்தில் சொதப்பிய ரெய்னா! கடுப்பான சென்னை அணி ரசிகர்கள்!
ஐபில் சீசன் 12 சாம்பியனை தேர்வு செய்யும் ஆட்டம் இன்று ஹைதராபாத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே நடந்து வருகிறது. இதுவரை இரண்டு அணிகளும் தலா மூன்று முறை ஐபில் கோப்பையை கைப்பற்றியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் கோப்பையை வெல்ல போவது யார் என இரண்டு அணி ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. கிரண் பொல்லார்ட் அதிகபட்சமாக 25 பந்துகளில் 41 ரன் எடுத்தார். கிரண் பொல்லார்ட் குறைவான ஒட்டகங்கள் எடுத்திருந்த நிலையில் தாகூர் வீசிய 17 . 2 வது பந்தை தூக்கி அடித்தார்.
பொல்லார்ட் அடித்த பந்து ரெய்னாவுடன் கேட்சாக சென்றது. மிகவும் அழகாக கையில் வந்து விழுந்த பந்தை ரெய்னா கேட்ச் எடுக்காமல் தவறவிட்டார். முக்கியமான நேரத்தில் முக்கியமான வீரரின் கேட்சை ரெய்னா தவறவிட்டது சென்னை அணி வீரர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கேட்ச் மிஸ் ஆன அடுத்த பந்தே பொல்லார்ட் சிக்சருக்கு பறக்கவிட்டார். மேலும் அதன்பின்னர் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கை உயரவும் வழிவகுத்தார் கிரண் பொல்லார்ட்.