மீண்டும் ஆட்டத்தை காட்டிய பெங்களூர் அணி! போராடி தோற்ற கொல்கத்தா!



RCB beats kkr by 10 runs in 35th ipl match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 35 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா, பெங்களூர் அணிகள் இடையே நடந்த நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 10 ரன் விதித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் எடுத்து. அணியின் கேப்டன் விராட்கோலி அதிகபட்சமாக 100 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

IPL 2019

214 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சற்று சொதப்பலாக ஆடினர். கொல்கத்தா அணியின் வீரர் ராணா 46 பந்துகளில் 85 ஓட்டமும், ரஸ்ஸல் 25 பந்துகளில் 65 ஓட்டமும் எடுத்து வெற்றிக்கு மிக அருகில்  சென்றனர்.

கடைசி ஓவரில் 24 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரஸ்ஸல் ஒரு சிக்ஸ் அடித்து பெங்களூர் அணிக்கு திரில் கொடுத்தார் அதன்பின்னர் ரன் அவுட் என்ற முறையில் ரஸ்ஸல் வெளியேற கடைசி பந்தில் ராணா சிக்ஸ் அடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 203 ரன் மட்டுமே எடுத்தது.

IPL 2019

இதன்மூலம் 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. இந்த ஐபில் சீசனில் பெங்களூர் அணி பெரும் இரண்டாவது வெற்றி இது என்பது குருப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் கடைசி அதாவது எட்டாவது இடத்தில்தான் உள்ளது.