திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள்.? இது போதுமா.? சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 10-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கி அதிரடியாக ஆடி மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ்கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 76 ரன்களை எடுத்து களத்தில் நின்றார். இறுதியில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை அதிக விலை கொடுத்து வாங்கியது குறித்து அந்த அணி விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால் அதன் நம்பிக்கையை பொய்யாக்காமல் தற்போது மேக்ஸ்வெல் விளையாடி அசத்தி அவரது திறமையை இந்த ஆட்டத்தில் நிரூபித்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணி 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராணா 18 ரன்களுடனும், கில் 21 ரன்களுடனும் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கி நிதானமாக ஆடிய திரிபாதி 25 ரன்களுடனும், மோர்கன் 29 ரன்களுடனும் வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கி அணியை சற்று முன்னேற்றத்திற்கு கொண்டு சென்ற ஹசல் 26 ரன்களுடனும், ரஸ்ஸல் 31 ரன்களுடனும் அவுட் ஆகினர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.