ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
கடைசி 3 ஓவரில் 27 ரன்கள் தேவை.. புவனேஷ்வருக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்..? ரோகித் விளக்கம்..!
நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 வித்யாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. புவனேஷ்வர் குமாருக்கு இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையிலும் கடைசியில் அவரை பந்துவீச ரோகித் சர்மா அழைக்கவில்லை.
17 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 112 ரன்கள் எடுத்திருந்தது. மீதமிருந்த 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 18 மற்றும் 20வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரோகித் சர்மா வேறு முடிவினை எடுத்தார்.
18-வது ஓவரை ஹார்திக் பாண்டியா வீச 19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையிலும் புவிக்கு வாய்ப்பு அளிக்காமல் ஆவேஸ் கானை பந்துவீச செய்தார் ரோஹித். கடைசி ஓவரின் இரண்டு பந்துகளிலேயே ஆட்டம் முடிந்து விட்டது. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
கடைசி நேரத்தில் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ள ரோகித் சர்மா, 'புவனேஸ்வர் குமார் இதே போன்ற சூழ்நிலையில் இந்திய அணிக்காக பல முறை பந்து வீசி அனுபவம் பெற்றவர். புதிய வீரர்களுக்கு இது போன்ற சமயங்களில் தான் வாய்ப்புகளை அளிக்கமுடியும். அவர்களிடமும் திறமை உள்ளது. இன்றைய போட்டியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட முடியாது' எனக் கூறியுள்ளார்.