என்னதான் ஆச்சு ரோகித் சர்மாவுக்கு.. பாதியிலேயே வெளியேறியது ஏன்?
நேற்று நடைபெற்ற இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 44 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சிக்சரையும் 3-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார். இன்று நல்ல வானவேடிக்கை இருக்கிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஓவரின் 4வது பந்தை சந்தித்த பிறகு ரோகித் சர்மாவால் மேலும் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ரோகித் சர்மாவிற்கு என்னதான் ஆயிற்று என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது அவர் குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் ரோகித் சர்மாவிற்கு முதுகுப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
🚨 UPDATE: #TeamIndia captain Rohit Sharma has a back spasm.
— BCCI (@BCCI) August 2, 2022
The BCCI medical team is monitoring his progress.#WIvIND