96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சேப்பாக்கம் மைதானத்தில் புலி போல் பாய்ந்து ஆடும் டான் ரோஹித்.! போற போக்கை பார்த்தல் இரட்டை சதம் தான் போல.!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.
இந்தநிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர். சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய புஜாரா 21 ரன்களில்ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ரகானே துவக்க வீரர் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பிய ரோஹித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி 131 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சதமடித்துள்ளார். அதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். தற்போது ரோஹித் சர்மா 101 ரன்களுடனும், ரகானே 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது 42 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.