#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேப்டனாக தோணி, விராட் கோலி செய்யாததை செய்துகாட்டிய ரோஹித் சர்மா! என்ன செய்துள்ளார் தெரியுமா?
இதுவரை தோணி, விராட் கோலி செய்யாத சாதனையை செய்துள்ளார் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடிவருகிரியாது. முன்னதாக நடந்த ஒருநாள் போட்டிகளில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.
தற்போது T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவதாக நடந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை 14 போட்டிகளில் கேப்டனாக ரோஹித் இருந்துள்ளார். இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கேப்டனாக 14 போட்டிகளை கடந்த பிறகு தோனி மற்றும் கோலி தலைமையிலான இந்திய அணி வெறும் 8 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் அவர்கள் சாதனையை முறியடித்து ரோஹித் ஷர்மா சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் இந்த சாதனையை க்ளார்க்குடன் சமன் செய்துள்ளார் ரோஹித் ஷர்மா.