#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சதைப்பிடிப்பு.. பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா! சமாளிப்பார்களா இளம் வீரர்கள்
இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 5 ஆவது t20 போட்டியில் சதைப்பிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா பாதியிலேயே வெளியேறினார்.
நான்காவது ஆட்டத்தில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று ஓய்வில் இருந்து வருகிறார்.
கே.எல் ராகுலுடன் சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியதால் ரோஹித் சர்மா மூன்றாவதாக களமிறங்கினார். சிறப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதத்தை கடந்தார்.
ஆட்டத்தின் 17 ஆவது ஓவரில் சதைபிடிப்பினால் ரோஹித் சர்மா அவதிப்பட்டார். முதலில் மருத்துவர் கொடுத்த நிவாரணத்திற்கு பிறகு ஒரு சிக்ஸரை விளாசினார் ரோஹித். ஆனால் அதே ஓவரில் ஒரு ரன் எடுக்க ஓடும்போது மீண்டும் வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவருக்கு பதிலாக சிவம் துபே களமிறங்கியுள்ளார்.