#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.! சிக்கலில் இந்திய அணி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T20 போட்டியை 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. T20 போட்டியை அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்நிலையில் கடைசி T20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
T20 போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்து வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ரோஹித் ஷர்மாவின் விலகல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏற்கனவே ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் தற்போது ரோஹித் சர்மாவும் காயமடைந்து இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.