#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலி பதவி விலகிய பின் ரோஹித் சர்மா போட்ட முதல் பதிவு என்ன தெரியுமா?? அதை நீங்களே பாருங்க..
விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் ரோஹித் ஷர்மா பதிவிட்ட முதல் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், ஒருநாள், T20 , டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டுவந்தார் விராட்கோலி. இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில் T20 போட்டிக்கான கேப்டன் பதிவியில் இருந்து தான் விலகுவதாக விராட்கோலி அண்மையில் அறிவித்தார்.
அதன்பிறகு, அவரை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டனாக இருந்துவந்த விராட்கோலி, டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் ரோஹித் ஷர்மா பதிவிட்ட முதல் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில், "Shocked!! என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அதிர்ச்சி தான், ஆனாலும் இந்திய கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்."