#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோனியின் திடீர் ஓய்விற்கு இதுதான் காரணம்.. நெருங்கிய நண்பரான ஆர்பி சிங் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென ஓய்வினை அறிவிக்க காரணம் என்னவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தோனியின் நெருங்கிய நண்பருமான ஆர்பி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பை அறையிறுதி போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய தோனி அதன்பிறகு இந்திய அணிக்காக ஒருமுறை கூட களமிறங்கவில்லை. தோனி நிச்சயம் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தோனியின் ஓய்வு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் தோனி ஓய்வு பெற காரணம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கபட்டதாக கூட இருக்கலாம். டி20 போட்டிகளில் தலைசிறந்தவரான தோனிக்கு நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும்.
ஆனால் இந்த ஒத்திவைப்பால் அடுத்த ஆண்டு வரை தன்னால் முழு திறமையுடன் விளையாட முடியுமா என்ற கேள்வி அவருக்குள் எழுந்திருக்கும். ஏனெனில் பெஸ்ட் பினிஷர் என புகழ்பெற்ற தோனியால் கடைசி கட்டத்தில் ஆட்டத்தில் வெற்றிபெற வைக்கமுடியவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்து தான் தோனி ஓய்வினை அறிவித்திருப்பார் என ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.