சச்சினின் இந்த வாழ்நாள் சாதனையை அசால்டாக உடைத்த சாய் சுதர்சன்!! புதிய சாதனை..



sachin-record-broken-by-sai-sudharshan

சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்து சுதர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் 2024 டி20 போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி மிக அபாரமாக விளையாடி 20 ஓவரில் 231/3 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

சென்னையை பந்தாடிய சாய் சுதர்ஷன்

தமிழக வீரர் சாய் சுதர்சன் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு பெரிய சவாலாக அமைந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கில் தம்முடைய பங்கிற்கு சென்னையை பந்தாடி 25 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக விளையாடியது.

இதையும் படிங்க: நிறைவேறாமலே போய்விடுமா தோனியின் ஆசை? அதுமட்டும் நடந்தால் நிச்சயம் உறுதி..

dhoni

உடைக்கப்பட்ட வாழ்நாள் சாதனை

கில் 50 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார், சாய் சுதர்ஷன் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 103 (51) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் 25 இன்னிங்ஸில் 1000 ரன்கள் கடந்துள்ளார். இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் சச்சின் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 31 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இந்தநிலையில், தற்போது 25 இன்னிங்ஸில் 1000 ரன்கள் கடந்து இந்த சாதனையை முறியடித்துள்ளார் சாய் சுதர்ஷன்.

இதையும் படிங்க: குழந்தை பிறக்கப் போகுது.. சீக்கிரம் கேமை முடிங்க.! சாக்ஷி தோனி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!