இனி சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் இப்படித்தான் கையாள வேண்டும் - சச்சின் அறிவுரை



Sachin says another super over if super over ties

இதுவரை கிரிக்கெட் விளையாட்டில் நடந்திராத அளவிற்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி. இந்தப் போட்டியின் கடைசி நிமிடங்களை பார்க்க தவறிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டு இருப்பர்.

50 ஓவர்களில் இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. அதன் பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால் அதுவும் டையில் முடிந்தது. பின்னர் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

wc2019

ஐசிசியின் இந்த விதிமுறை பல வருடங்களாக இருப்பினும் இப்போது தான் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டதால் அனைவருக்கும் மிகுந்த மன வேதனையை அளித்தது. காரணம் சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணிக்கு கோப்பை கிடைக்காதது தான். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் உலகின் ஜாம்பாவான் சச்சின், " இனி சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்காமல் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்த வேண்டும். உலகக் கோப்பையில் மட்டுமல்லாமல் அனைத்து போட்டிகளிலும் இதையே பின்பற்ற வேண்டும். கால்பந்து ஆட்டத்தை போலவே கிரிக்கெட்டிலும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் எந்த பிரச்சினையும் கிடையாது" என்றார் சச்சின்.

wc2019

மேலும் ஐபிஎல் தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி பெறும் அணிகளுக்கு எலிமினேட்டர் சுற்று நடத்துவது போன்ற உலகக் கோப்பை போன்ற தொடர்களிலும் நடத்தினால் நன்றாக இருக்கும் என இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தெரிவித்தது போன்று சச்சின் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளார்.