மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலியை, சச்சின் காலில் விழ வைத்த யுவராஜ் மற்றும் இர்பான் பதான்.! என்ன காரணம் தெரியுமா.?
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை, எந்த ஒரு வீரர் பார்த்தாலும், உடனடியாக அவரிடம் பேசுவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பார்கள். அவரும் அனைத்து வீரர்களையும் தட்டிக்கொடுத்து எளிய முறையில் பழக கூடியவர்.
இந்தநிலையில், இந்திய அணிக்குள் நுழைந்த காலகட்டத்தில் விராட் கோலியிடம், அப்போதைய மூத்த வீரர்கள் யுவராஜ் சிங், இர்பான் பதான் மற்றும் முனாப் பட்டேல் ஆகியோர், இந்திய அணிக்கு புதிதாக வரும் வீரர்கள் யாராக இருந்தாலும் சச்சின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய விராட் கோலி, உடனே சென்று சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சச்சின், விராட் கோலியிடம் ஏன் இது மாதிரி செய்தாய்! காலில் விழுவது என்பது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த யுவராஜ், பதான், பட்டேல் ஆகிய வீரர்கள் சத்தமாக சிரித்துள்ளனர். அதற்குப் பிறகுதான் விராட் கோலியை அவர்கள் பிராங்க் செய்துள்ளது, சச்சினுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சச்சின் சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.