மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரு கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒரே இடத்தில்... ஆனால் எந்த களத்தில் பார்த்தீங்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!
கிரிக்கெட் உலகில் மாபெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி. இருவரும் டென்னிஸ் களத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி மாஸ்டர் பிளாஸ்டராக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் 100 சதங்கள் என மொத்தமாக 34,357 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரைப் போலவே கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை வழிவகுத்தவர் மகேந்திர சிங் தோனி. 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தார். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
ஓய்வுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி இருவரும் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தற்போது புதிய விளம்பரப் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டென்னிஸ் களத்தில் நடைபெற்ற இதன் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Latest pictures of MS Dhoni with Sachin tendulkar pic.twitter.com/H8l3lAfHci
— Jayprakash MSDian™ 🥳🦁 (@ms_dhoni_077) October 6, 2022