மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை பிறக்கப் போகுது.. சீக்கிரம் கேமை முடிங்க.! சாக்ஷி தோனி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 212 ரன்களை குவித்தது. இந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சற்று தடுமாற்றத்துடன் ஆடி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் 7 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 134 ரன்களையே எடுத்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. இடையில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்ட நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பதிவில் அவர், தோனி விக்கெட் கீப்பிங்கில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இன்று சீக்கிரம் போட்டியை முடித்து விடுங்கள். குழந்தை பிறக்கப் போகிறது. வலி எடுக்கத் துவங்கி விட்டது. இது அத்தையாகப் போகும் எனது கோரிக்கை" என பதிவிட்டுள்ளார். அதாவது சாக்ஷியின் சகோதரர் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பதிவு வைரலாகி வருகிறது.