#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுதான் உலககோப்பைக்கான இந்திய அணியாக இருக்கும் - சஞ்சய் மஞ்ரேக்கர்
உலககோப்பை நெருங்கி வரும் நிலையில் உலககோப்பைக்கான உத்தேச இந்திய அணியை கனிப்பதில் முன்னாள் வீரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சஞ்சய் மஞ்ரேக்கர் தனது உத்தேச அணியை அறிவித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடத் தவறிய அம்பத்தி ராயுடுவை தனது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார் சஞ்சய். அவருக்கு பதிலாக கேஎல் ராகுலை அணியில் சேர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
கேஎல் ராகுல் அணியில் இருக்கும்பட்சத்தில் ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு மாற்றாக தேவைப்படும் போது துவக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஜடேஜா மற்றும் ரிஷப் பண்டிற்கும் வாய்ப்பளித்துள்ளார்.
இந்திய உத்தேச அணி:
தவான், ரோகித் சர்மா, கோலி, விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது சமி, சாகல், பும்ரா, புவனேஷ்வர் குமார், பண்ட், ஜடேஜா, கேஎல் ராகுல்