#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சஞ்சு சாம்சனுக்கு இப்படியா நடக்க வேண்டும்! இரண்டு ஆட்டங்களிலும் ஒரே மாதிரி நடந்த வினோத செயல்
நியூசிலாந்திற்கு எதிரனாக நடைபெற்று வரும் t20 தொடரில் இந்திய அணி முதல் 4 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடையின் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். முதல் 3 போட்டிகளில் ஆடும் லெவெனில் இடம்பெறாத சஞ்சு சாம்சனுக்கு நான்காவது மற்றும் கடைசி போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நான்காவது போட்டியில் கே.எல்.ராகுலுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் மூன்றாவது (1.3) பந்தில் குண்களின் பந்துவீச்சில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் அவர் ஒரு சிக்சருடன் 8 ரன்கள் எடுத்தார்.
இன்று நடைபெற்று வரும் 5 ஆவது t20 போட்டியிலும் சாம்சன் கே.எல்.ராகுலுடன் துவக்க ஆட்டக்காரராக துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். நான்காவது போட்டியை போன்றே குண்களின் இன்றைய ஆட்டத்திலும் இரண்டாவது ஓவரினை வீசினார். சென்ற ஆட்டம் போலவே சாம்சன் அந்த ஓவரின் மூன்றாவது (1.3) பந்தில் குண்களின் பந்துவீச்சில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே வீரர் அடுத்தடுத்த போட்டிகளில் ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
4th T20I 👉 Ball 1.3: Samson c Santner b Kuggeleijn
— ICC (@ICC) February 2, 2020
5th T20I 👉 Ball 1.3: Samson c Santner b Kuggeleijn#NZvIND pic.twitter.com/12vPe42cv2