மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முக்கியமான நேரத்தில் கைவிட்ட ஷ்ரேயஸ் அய்யர்! சோகத்தில் டெல்லி அணி ரசிகர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைகிறது. சீசன் 12 ஐ வெல்லப்போகும் அணி யார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். மும்பை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இறுதி போட்டியில் விளையாடப்போவது யார் என்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே இன்று போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் அடித்து ஆடினாலும் போக போக வரிசையாக விக்கெட் சரிய ஆரம்பித்தது.
டெல்லி அணிக்கு தூணாக விளங்கும் டெல்லி அணியின் கேப்டன் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி டெல்லி அணியை அடுத்த போட்டிக்கு முன்னேற உதவினார். ஆனால், மிக முக்கியமான இன்றைய ஆட்டத்தில் 18 பந்துகளில் 13 ரன் என்ற சொற்ப எண்களில் ஆட்டம் இழந்தார்.
டெல்லி அணி இமாலய இலக்கை தொட்டே ஷ்ரேயஸ் அய்யர் பாடுபடுவர் என டெல்லி அணி ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்த நிலையில் முக்கியமான ஆட்டத்தில் ஷ்ரேயஸ் அய்யர் கைவிட்டது டெல்லி அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.