மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுவர்கள் சதி செய்துவிட்டார்கள்! தாய்யிடம் கண்ணீர்விட்டு கதறும் சிறுவன்! வைரல் வீடியோ!
ஐபில் சீசன் 12 நேற்றுடன் முடிவடைந்தது. மும்பை அணி கோப்பையை கைப்பற்றி சாம்பியன்ஷிப் படத்தையும் கைப்பற்றியது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இரண்டும் தலா மூன்றுமுறை ஐபில் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் மும்பை அணி நான்காவது முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நேற்று முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன் எடுத்தது. 150 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் இழந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில் கொடுமையான விஷயம் என்வென்றால் இரண்டு ரன் எடுத்திருந்த நிலையில் அணியின் கேப்டன் தோணி ரன் அவுட் முறையில் வெளியேறினார். தோணி அவுட்டா? இல்லையா என்பது 3 வது நடுவர்களுக்கே குழப்பமாக இருந்த நிலையில் கடைசியில் தோணி அவுட் என தீர்ப்பு வந்தது.
தோனியின் விக்கெட்டை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவரின் தோணி அவுட் இல்லை, நடுவர் பொய் சொல்லிவிட்டார் என கதறி அழுக, அவரது தாயார் இதெல்லாம் மேட்ச் பிக்சிங் நீ ஏன்டா அழுகிற என சமாதானம் செய்யும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.