மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ரோஹித் ஷர்மாவின் அந்த ஒரு செயலால் தான் நாங்கள் மீண்டு வந்தோம்" அதிரடி நாயகன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி!
நேற்று நாக்பூரில் நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 - 1 என தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வென்று இருந்ததால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 174 ரன்களை குவிக்க முடிந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய பங்களாதேஷ் அணி மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த மொஹம்மத் நயிம் மற்றும் மிதுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தள்ளார்.
ஆனால் அந்த சமயத்தில் ரோஹித் சர்மா நிகழ்த்திய ஒரு உற்சாக உரை எங்களுக்கு புதிய ஊக்கத்தை அளித்ததாகவும், அதன் பின்னரே ஆட்டத்தின் போக்கு மாறியதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் இக்கட்டான அந்த தருணத்தில் பந்துவீச்சாளர்களை ரோஹித் சர்மா சரியாக பயன்படுத்தி பங்களாதேஷ் அணியின் வேகத்தை கட்டுப்படுத்தினார்.