மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2020 ஐபிஎல் தொடருக்காக இப்போதே அதிரடி மாற்றம் செய்த சன் ரைசர்ஸ் அணி!
2020 ஐபிஎல் தொடருக்கான புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நட்நது முடிந்த உலக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பேலீஸ். உலகக்கோப்பை முடிந்த கையோடு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி பேலீஸை அதிரடியாக பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கடந்த 7 சீசன்களாக சன் ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்த டாம் மூடி தற்போது நீக்கப்பட்டுள்ளார். இவர் சன் ரைசர்ஸ் அணியை 5 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற செய்தும் 2016 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில் டாம் மூடியை நீக்கிவிட்டு ட்ரெவர் பேலீஸை பயிற்சியாளராக நியமிப்பதாக சன் ரைசர்ஸ் அணி அறிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகள் தங்கள் அணிக்காக பயிற்சியளித்த டாம் மூடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
🚨Announcement🚨
— SunRisers Hyderabad (@SunRisers) July 18, 2019
Trevor Bayliss, England's WC Winning coach, has been appointed as the new Head Coach of SunRisers Hyderabad. #SRHCoachTrevor pic.twitter.com/ajqeRUBym5