#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'அடுத்த 'தல' யாருனா இவரை தான் சொல்வேன்' சுரேஷ் ரெய்னா புகழாரம்; யாரை கூறியுள்ளார் தெரியுமா?
இந்திய அணியில் தல தோனி தலைமையின் கீழ் பல போட்டிகளில் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தவர் சுரேஷ் ரெய்னா. 'தல தோனி வெற்றிகரமான கேப்டன்' என்ற பெயரில் சுரேஷ் ரெய்னாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் அதே வெற்றிக்கூட்டணி தொடர்ந்தது. இதனால் ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என அன்போடு அழைக்க தொடங்கினர்.
இந்நிலையில், இணைய நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த கூல் கேப்டன் யாராக இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்பொழுது சிறிதும் யோசிக்காமல் அது டான் ரோகித்தாகாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இளம் வீரர்கள் இடம் இயல்பாக பழகக்கூடியவர். ஓய்வு அறையில் அனைத்து வீரர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதனை செயல்படுத்துபவர்.
அமைதியான குணம் கொண்ட அவரிடம் தல தோனியின் சாயலை பார்த்திருக்கிறேன். சோர்ந்து போய் இருக்கும் வீரர்களிடம் சென்று தன்னம்பிக்கையோடு புத்துணர்ச்சி அளிப்பார். கேப்டன் என்ற தலைக்கனம் இல்லாமல், சக அணி வீரர்களுள் ஒருவராக இருந்து அணியை வழி நடத்துவார்.
ஆசிய கோப்பை தொடரில் அவரது தலைமையில் விளையாடும்போது அணியில் விளையாடும் அனைவரும் கேப்டன் தான் என்று அவர் நினைத்ததை உணர்ந்தேன். ஷர்துல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் போன்ற இளம் வீரர்களுக்கு, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை விளக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
எப்போதுமே நேர்மறை எண்ணங்களுடன் இருப்பவர். அதேபோல், மற்ற வீரர்களுக்கும் அதை மாதிரியான எண்ணங்களை விதைக்கக் கூடியவர்” என்று தெரிவித்தார். எம்.எஸ். தோனி அற்புதமான வீரர். ஐபிஎல் தொடரில் தோனியை விட ரோஹித் ஷர்மா அதிக கோப்பைகளை வென்றிருக்கிறார். நம்முடைய சொற்களுக்கு கேப்டன் செவி சாய்க்கும் போது, நம்மால் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்” என்று கூறினார்.