#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஹா..!! தலைவன் திரும்ப வந்துட்டான்யா..!!! இனி அதிரடி காத்திருக்கு.. செம மகிழ்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள்..
சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியில் இருந்து சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அதேநேரம் கடந்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங்கும் கடுமையாக சொதப்பியதால் சென்னை அணி முதல் முறையாக முதல் சுற்றிலையே வெளியேறியது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட உள்ளது.
இதற்காக சென்னை அணி வீரர்கள் மும்பை சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுடன் தற்போது சுரேஷ் ரெய்னாவும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டு அணியில் இருந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தநிலையில், தற்போது அவர் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.