சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்த ஐபில் சீசனில் காத்திருக்கும் ஜாக்பாட்.. இந்தமுறை விளையாடாத அவருக்கு அடுத்த ஆண்டு காத்திருக்கும் அதிர்ஷ்ட்டம்



suresh-raina-may-be-a-new-caption-for-9th-ipl-team

அடுத்த ஆண்டு ஐபில் போட்டியில் இணைய இருக்கும் 9 வது அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் மும்பை அணி வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பெரும் ரசிகர்களை கொண்ட சென்னை அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் முதல் சுற்றிலையே வெளியேறியது.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடங்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் அணியில் இருந்து வெளியேறினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் அடுத்த சீசனில் ரெய்னா சென்னை அணிக்காக விளையாடுவாரா? சென்னை அணி அவரை மீண்டும் அணியில் சேர்க்குமா இப்படி பல கேள்விகள் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

suresh raina

இந்நிலையில் அடுத்த ஐபில் சீசனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடத்த பிசிசிஐ அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. இதனிடையே அடுத்த ஐபில் சீசனில் புதிதாக ஒரு அணி ஐபில் போட்டியில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணி குஜராத் அல்லது அஹமதாபாத்தை மையமாக கொண்ட அணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த அணியை வாங்க கடும் போட்டி நிலவுவதாகவும், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மோகன்லால் அந்த அணியை வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் புதிதாக வர இருக்கும் அணிக்கு சுரேஷ் ரெய்னாவை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே குஜராத் லைன்ஸ் என்ற ஐபில் அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்து, அந்த அணியை சிறப்பாக வழிநடத்தியாதல் தற்போது குஜராத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் அணிக்கு அவரே கேப்டனாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாட சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்த ஐபில் சீசனில் இப்படி ஒரு அதிர்ஷ்டமா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர். ஆனால் 9 வது அணி ஐபில் போட்டியில் இணைவது குறித்தோ, அதன் கேப்டன் குறித்தோ இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவரவில்லை எனப்து குறிப்பிடத்தக்கது...