சிஎஸ்கே அபார வெற்றி!! முதல் சாதனையை படைத்த சுரேஷ் ரெய்னா! குஷியில் சென்னை ரசிகர்கள்!



suresh raina new record


இந்தியன் பிரீமியர் லீக் 12வது சீசன் இன்று சென்னையில் தொடங்கியது. கடந்த வருடம் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு 3 ஆவது முறையாக கோப்பையை வென்று 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற2ஆவது அணி என்ற பெருமையை பெற்றது. 

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க மட்டையிட்டாளர்கள் பார்திவ் பட்டேல், கேப்டன் கோலி களமிறங்கினர்.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி  17.1 ஓவர்களுக்கு  70 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொதப்பி உள்ளது.

csk

இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. பெங்களூரு அணியை போல சென்னை அணியும் ஆரம்பத்தில் தடுமாறி வந்தது. சென்னை அணியில் ராயுடு மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்தார். மிகவும் மோசமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா 19 ரன்களை எடுத்ததன் மூலம் 5000 ரன்களை கடந்து ஐபிஎல் தொடரில் முதலில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை ரெய்னா தட்டி சென்றுள்ளார். இதற்கு முன்னர் ரெய்னா 4985 ரன்களுடன் முதலிடத்தில் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.