வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
என்ன நடந்துச்சு? சுரேஷ் ரெய்னா எப்படி ரன் அவுட் ஆனாரு!! சிஎஸ்கே ரசிகர்களை கடுப்பாக்கிய அந்த சம்பவம்.. பரபரப்பு வீடியோ!!
நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா ரன் அவுட் ஆனதுக்கான காரணம் சென்னை அணி ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
சென்னை - டெல்லி அணிகள் மோதிய நேற்றைய ஐபில் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ப்ரித்விஷா மற்றும் தவான் இருவரும் மிக அதிரடியாக ஆட, இறுதியில் டெல்லி அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ரெய்னா மிக அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் இணைந்த ஜடேஜாவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். 16 ஆவது ஓவரில், ரெய்னா மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் இருந்த போது, ஆவேஷ் கான் வீசிய பந்தை ஜடேஜா ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க, 2 ரன்கள் எடுப்பதற்காக இருவரும் வேகமாக ஓடினர்.
அப்போது முதல் ரன் ஓடிய ஜடேஜா இரண்டாவது ரன்னிற்கு திரும்பினார், அந்த சமயம் ஜடேஜா ரன் ஓடும் திசையில் பவுலர் ஆவேஷ் கான் நின்றதால் ரன் ஓடிய ஜடேஜா பவுலர் மீது மோத, சற்று தடுமாறி மீண்டும் எதிர் திசையில் ஓட தொடங்கிவிட்டார்.
இதனை கவனிக்காமல் ரெய்னா பாதி தூரம் ஓடிவர, இதற்கிடையில் அவர் ரிஷப் பண்ட் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். 36 பந்துகளில் ரெய்னா, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்திருந்தநிலையில் அவர் ரன் அவுட் ஆனது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
பேட்ஸ்மேன் ரன் ஓடும் திசையில் பவுலர் நின்றதால்தான் ஜடேஜாவால் ரன் ஓட முடியாமல் திரும்பியதாகவும், இதனால்தான் ரெய்னா ரன் அவுட் ஆனார் எனவும் சென்னை அணி ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.
— Simran (@CowCorner9) April 10, 2021