#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ஓவரை விளாசிய சூர்யகுமார் யாதவ்.! ஒரே ஓவரில் எத்தனை ரன்கள் தெரியுமா.?
உள்ளூர் போட்டிகளில் பல முறை தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடியவர் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்திய அணியில் தேர்வாகி விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. கடந்த ஐபிஎல் சீசனில் 480 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 4 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி டி20 உள்நாட்டுத் தொடருக்காக மும்பை அணி பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடருக்காக தங்களை தயார்படுத்த, மும்பை அணி தங்கள் அணிக்குள்ளேயே பயிற்சி டி20 போட்டியை நடத்தியது. இதில் சூரிய குமார் யாதவ் தலைமையில் மும்பை ‘பி’ அணி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமையில் மும்பை டி அணிகள் பயிற்சி டி20-யில் ஆடின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது. இதில் 7 சிக்சர்கள், 8 பவுண்டரி உட்பட சூரியகுமார் யாதவ் 47 பந்துகளில் 120 ரன்களை குவித்திருந்தார். குறிப்பாக சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 13வது ஓவரில் 3 பவுண்டரி ஒருசிக்சர் உட்பட 21 ரன்களை எடுத்தார் சூரியகுமார் யாதவ்.
சூர்ய குமாரின் அதிரடி காரணமாக அவரது அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணி சிறப்பாக ஆடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் சூரிய குமார் யாதவ் தலைமையிலான மும்பை ‘பி’ அணி வெற்றிபெற்றது.