வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
என்ன ஒரு அதிசயம்! அரையிறுதிக்குள் செல்லும் அணிகளை இப்போதே தெளிவாக காட்டும் புள்ளிப்பட்டியல்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 2019 ஐசிசி உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த பத்து அணிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இந்த முறை லீக் சுற்றில் ஒரு அணியானது மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு ஆட்டத்தில் மோதுகின்றது. தற்பொழுது இந்த தொடர் ஆ4னது லீக் சுற்றில் ஒரு பாதி முடிவுற்ற நிலையில் உள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டங்கள் நடைபெறும்.
இதில் தற்போதைய நிலவரப்படி அனைத்து அணிகளுமே 4 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளது. சில அணிகள் 5 போட்டிகளை முடித்து விட்டன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எந்த தோல்வியையும் சந்திக்கவில்லை. இந்த இரு அணிகளுக்குமான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பாதி கட்டத்தை தாண்டி உள்ள இந்த லீக் சுற்றில் முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன. இந்த நான்கு அணிகளில் 5 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 4 போட்டிகளிலும் மற்ற மூன்று அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நான்கு அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் அதிகபட்சமாக ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் அதிகமான வெற்றிகளைப் பெற்று மற்ற ஆறு அணிகளில் ஒரு அணி முதல் நான்கு இடத்திற்குள் வருமா என்பது சந்தேகம் தான்.
எனவே தற்போது இருக்கும் புள்ளி பட்டியலில் உள்ள முதல் நான்கு அணிகள் தான் அரையிறுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த அணி எந்த இடத்தை பிடிக்கும் என்பதில் கடைசிவரை பரபரப்பான போட்டி நிலவும் என்பது மட்டும் நிச்சயம்.