96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஐயோ பாவம்! நியூசிலாந்து அணி உலககோப்பையை இழக்க காரணமான அந்த இரண்டு தவறுகள் என்ன தெரியுமா?
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 1975 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இங்கிலாந்து அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. அதன்பிறகு அதிக பௌண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடைசி வரைக்கும் சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணி கடைசி இரண்டு ஓவர்களில் செய்த மிகப்பெரிய தவறினால் உலகக்கோப்பையை தவறிவிட்டது.
49 ஆவது ஓவரின் கடைசி பந்தில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் தூக்கி அடித்த பந்தை எல்லைக்கோட்டில் கேட்ச் பிடித்தார் போல்ட். ஆனால் எல்லை கோடு அருகில் இருந்ததை உணராமல் போல்ட் எல்லைக்கோட்டின் மீது காலை வைத்ததால் சிக்ஸராக மாறியது.
பின்னர் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்ட போது லெக் திசையில் தட்டி விட்டு இரண்டு ரன்கள் ஓடினார் ஸ்டோக்ஸ். அப்போது கப்தில் பிடித்து வீசிய பந்து ஸ்டோக்சின் பாட்டில் பட்டு பௌண்டரிக்கு சென்றது. எனவே அந்த பந்தில் 6 ரன்கள் கிடைத்தது. இந்த இரண்டு மிகப்பெரிய தவறு தான் நியூசிலாந்து அணி உலகக்கோப்பையை இழக்க காரணமாகிவிட்டது.