#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை அணியில் இருந்து தூக்கி வீசப்படும் முக்கிய வீரர்? அவருக்கு பதில் யார் தெரியுமா?
ஐபில் சீசன் 12 இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வருகிறது. சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும்.
இந்த சீசனில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிவந்த சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது. அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்பதால் சென்னை அணியில் ஒருசில அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
1 . தூக்கி வீசப்படும் வாட்சன்
இந்த சீசனில் ஒரு போட்டியை தவிர வேறு எந்த போட்டியிலும் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை. சென்னை அணிக்கு ஓப்பனிங் சொதப்பலாக இருப்பதால் அடுத்த போட்டியில் வாட்சன் தூக்கப்பட்டு அவருக்குப்பதில் முரளி விஜய் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 . வேகப்பந்து
இன்றுவரை சென்னை அணி வேக பந்து வீச்சுக்கு தீபக் சாகரை மட்டுமே நமீபித்துள்ளதால் மோகித் சர்மா, ஸ்காட் குகேஜிலின் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
3 . மிடில் ஆர்டர்
சென்னை அணியை பொறுத்தவரை ஓப்பனிங், மிடில் ஆர்டர் இரண்டுமே சுமாராகத்தான் உள்ளது. இதனால் மிடில் ஆர்டரில் துருவ் சோரேவையும் கொண்டுவரவும் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் தெரிகிறது.