மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் ப்ளே-ஆப் சுற்று போட்டிகள்..!! டிக்கெட் விற்பனை இன்று நண்பகல் தொடக்கம்..!!
சென்னையில் நடைபெறும் 2 ப்ளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மொத்தம் உள்ள 70 லீக் போட்டிகளில் இன்னும் 6 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களுக்கான போட்டியில், முறையே சென்னை, லக்னோ, மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். இதனை தொடர்ந்து நடைபெறும் ப்ளே-ஆப் சுற்றில், புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான முதலாவது தகுதி சுற்று போட்டி வரும் 23 ஆம் தேதியும், புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான வெளியேற்றுதல் சுற்று போட்டி 24 ஆம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்ட்டர்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நேரடி டிக்கெட் விற்பனையை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிக்கெட் விற்பனை இன்று நண்பகல் 12 மணிக்கு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.