தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உலகக்கோப்பை 2019-ல் எதிராணிகளை திணறடிக்கப்போகும் 5 முக்கியமான ஆல் ரௌண்டர்கள் யார்யாரென தெரியுமா?
ஐபிஎல் தொடர் முடிந்து ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து இங்கிலாந்தில் வரும் மே 30 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக்கோப்பை தொடர் தான். பத்து அணிகள் கலந்து கொள்ளப்போகும் இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரில் பல ஆல் ரௌண்டர்களின் திறமையை பார்த்து ரசிகர்கள் உலகோப்பையில் அந்த ஆல் ரௌண்டர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கணிப்பில் இருந்து வருகின்றனர். காரணம் ஒரு அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து ஆட்டத்தின் போக்கை திசை திருப்பும் வல்லமை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்த ஆல் ரௌண்டார்களால் மாற்ற முடியும் என்பது தான். இவ்வாறு வரும் உலகக்கோப்பை தொடரில் எதிரணிக்கு மிகுந்த சவாலாக இருக்க போகும் 5 முக்கிய ஆல் ரௌண்டர்களை பற்றி தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
1 . ஆண்ட்ரூ ரசல் (வெஸ்ட் இண்டீஸ்)
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் ஆடிய ரஸ்ஸலை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. 14 போட்டிகளில் ஆடிய ரஸ்ஸல் 510 ரன்கள் எடுத்து 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவர் இந்த தொடரில் மட்டும் 52 சிக்ஸர்களை வீழ்த்தினார். எதிராணிகளின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த ரஸ்ஸல் உலகோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுகிறார். 2017 ஆம் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் மீண்டும் அணியில் சேர்ந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் சேர்ந்துள்ளது. நிச்சயம் இவர் முழு பார்மில் ஆடினால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிரணிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்து பல சாதனைகள் படைப்பர் என்பதில் சந்தேகமில்லை.
2 . ஹார்டிக் பாண்டியா (இந்தியா)
2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் படம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஹார்டிக் பாண்டியாவும் ஒரு முக்கிய காரணம். ஐபிஎல் தொடருக்கு முன்பு காயம் காரணமாக ஓய்வில் இருந்த பாண்டியா இந்த தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 402 ரன்கள் எடுத்து 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவரது பேட்டிங் திறமை இதுவரை பார்த்ததைவிட பலமடங்கு அதிகரித்துள்ளதை ரசிகர்கள் கண்கூடாக பார்க்க முடிந்தது. தோல்வியை நோக்கி செல்லும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் சக்தி நிச்சயம் இவரிடம் உள்ளது இனத்தை கண்டு எதிரணியில் அச்சம் கொண்டுள்ளனர். இவர் மட்டும் முழு பலத்துடன் ஆடினால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
3 . பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் வலிமையான அணியாக தென்படுவதற்கு காரணமான வீரர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். வேகப்பந்து வீச்சாளராக முதலில் அறிமுகமான ஸ்டோக்ஸ், பின்னர் பேட்டிங்கில் எதிராணிகளின் பந்துவீச்சை துவம்சம் செய்து பலமுறை இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த முறை உலக்கோப்பை தான் சொந்த மண்ணில் நடைபெறுவதால் இவரது முழு திறமை நிச்சயம் வெளிப்பட்டு எதிராணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 . மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடக்கூடிய திறமையும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் வளமையும் கொண்டவர் இவர். மேலும் ஸ்லொவ் மீடியம் பந்துவீச்சு மூலம் ஆட்டத்தின் நடுவில் எதிராணிகளின் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை பிரிக்கும் திறமை கொண்டவர். பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் இவருக்குள் இருக்கும் முழு திறமை வெளிப்பட்டால் எதிராணிகளுக்கு திண்டாட்டம் தான்.
5 . சாகிப் உல் ஹசான் (வங்கதேசம்)
சர்வதேச அளவில் கடைசி இடத்தில் இருந்த வங்கதேசை அணியை கண்டு இன்று முன்னணி அணிகளும் பயப்படும் அளவிற்கு வங்கதேசை அணியின் மதிப்பை உயர்த்த முக்கிய பங்காற்றியவர் சாகிப் உல் ஹசான். லெஃப்ட் ஆர்ம் ஸ்ப்பினரான இவர் பேட்டிங்கிலும் முக்கியமான தருணங்களில் கைகொடுத்து பலமுறை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். மிகவும் வலுவான அணிகளுக்கு சர்வதேச தொடர்களில் அதிர்ச்சி அளிக்கும் வங்கதேச அணியின் இவர் சிறப்பாக ஆடினால் நிச்சயம் எதிராணிகளுக்கு அதிர்ச்சி உறுதி.