மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அணியின் தோல்விக்கு காரணமான அந்த இரண்டு முக்கிய விஷயங்கள்! புலம்பும் ரசிகர்கள்.
டெல்லி அணியுடனான தோல்விக்கு சென்னை அணியின் மோசமான பீல்டிங்கும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி வீரர்கள் டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்களும், ராயுடு 45 ரன்களும் குவித்தனர்.
180 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், தவான் ஒருபுறம் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடினார். இறுதியில் 58 பந்துகளைச் சந்தித்த ஷிகார் தவான் 101 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் நின்றார். டெல்லி அணி வெற்றிபெற்ற தவானின் அதிரடி ஆட்டம் ஒரு காரணம் என்றாலும், சென்னை அணி தோல்வியடைய தவானின் 4 கேட்ச்களை சி.எஸ்.கே வீரர்கள் தவறவிட்டது மிகப் பெரிய காரணமாக இருந்தது.
அதோடு சென்னை அணியின் பீல்டிங்கும் சற்று சொதப்பலாகவே அமைந்தது. முக்கியமான நேரங்களில் கேட்ச் மற்றும் ரன் அவுட்டை சி.எஸ்.கே வீரர்கள் கோட்டை விட்டனர். இறுதியில் கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவை என்றநிலையில் ஜடேஜா பந்து வீச, அக்ஷர் படேல் 3 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
எப்போதும் கடைசி ஓவரை வீசும் பிராவோ, இந்தமுறை காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் வெறும் வழியில்லாமல் கடைசி ஓவர் ஜடேஜாவிடம் சென்றது. ஒருவேளை கடைசி ஓவரை பிராவோ வீசி இருந்தால் 17 என்ற கடினமான இலக்கை எட்டவிடாமல் சென்னை அணி வெற்றிபெற்றிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
காயம் காரணம் பிராவோ வெளியேறியதும் சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.