திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதல் ஓவரிலேயே சிறுத்தை போல பாய்ந்து துவக்க வீரரை தட்டி தூக்கிய உமேஷ் யாதவ்.!வைரல் வீடியோ
2022 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது,. நேட்ராய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும் , ரகுமான் 3 விக்கெட்களும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி 19-வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. கொல்கத்தா அணியில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
— Maqbool (@im_maqbool) April 28, 2022
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அவருக்கு கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் பந்துவீசினார். பந்தானது பேட்டின் முனையில் பட்டு வேகமாக உமேஷ் யாதவை நோக்கி சென்றது. அந்த பந்தை உமேஷ் யாதவ் புலி போல பாய்ந்து சென்று கீழே விழுந்து பிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.