இந்திய தடுப்புச்சுவர் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட்டை மிஞ்சிய விஹாரி.! நாக்குத்தள்ளும் ஆஸ்திரேலிய பவுலர்கள்.!



vihari very tough to australian bowlers

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில், 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு தேவை இன்னும் 101 ரன்கள் இருக்கும் நிலையில் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இந்தநிலையில், போட்டியை டிரா செய்ய இந்திய அணியினர் முடிவு செய்யவுள்ளதாக தெரிகிறது.

test

இதனை அடுத்து தொடர்ச்சியாக பல ஓவரக்ள் மெய்டன் ஓவர்கள் ஆகி வருகிறது என்பதும் விஹாரி 101 பந்துகளுக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து கட்டை போட்டு வருகிறார். தன்னுடைய பேட்டிங்கால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சோதித்து வருகிறார் விஹாரி. 

பொறுமையின் உச்சகட்டமாக விளையாடும் விஹாரி குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். விக்கெட்டுகளை விடாமல் விஹாரி சரியான ஆட்டம் ஆடுகிறார் என சிலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதில் வல்லவர்களாக இருந்த சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் போலவே  தற்போது விஹாரி அவர்களுக்கு இணையாக இந்த போட்டியை டிரா செய்ய கடுமையாக போராடி வருகிறார்.