டக் அவுட்டானாலும் கேப்டனின் மனதில் இடம்பிடித்த ஹார்டிக் பாண்டியா! புகழ்ந்து தள்ளிய விராட் கோலி



Virat kholi praises hardik pandya

நேற்றைய போட்டியின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவின் பந்துவீச்சை குறித்து புகழ்ந்து தள்ளினார்.

இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருந்த ஒரு ஆல்ரவுண்டர் குறையை நிவர்த்தி செய்தவர் ஹார்டிக் பாண்டியா. இடையில் ஒரு சிக்கலில் சிக்கி தடையில் இருந்த பாண்டியா ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்து உலகக்கோப்பை இந்திய அணியில்  இடம்பிடித்தார்.

wc2019

நேற்று பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் 39 ஆவது ஓவரில் 5 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அடுத்த எப்படியும் 100 ரன்களை இந்தியா அடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சமயத்தில் பாண்டியா வந்த வேகத்திலே டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஆனால் பேட்டிங்கில் தவறினாலும் பவுலிங்கில் தனது திறமையை நிரூபித்து நிவர்த்தி செய்துவிட்டார் பாண்டியா. 10 ஓவர்கள் பந்து வீசிய பாண்டிய 60 ரன்களை விட்டுக்கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக அரைசதம் அடித்த சாகிப்பின் விக்கெட். இந்தியாவின் வெற்றிக்கு பாண்டியாவின் பவுலிங் மிகவும் உறுதுணையாக இருந்தது.

wc2019

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் முடிவில் பேசிய கேப்டன் விராட் கோலி, "எப்பொழுதெல்லாம் அழுத்தம் கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் சிறப்பாக பந்து வீசுகிறார் ஹார்டிக். ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டை கைப்பற்றும் நுணுக்கம் அவரிடம் உள்ளது. அவர் பந்து வீசும்போது ஒரு பேட்ஸ்மேன் போலவே யோசிப்பதால் எளிதாக விக்கெட்டை கைப்பற்றி விடுகிறார். அவர் உண்மையில் சிறப்பாக பந்து வீசுகிறார்" என புகழாரம் சூட்டியுள்ளார் கோலி.